சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பதிவு செய்யும் படைப்பாக உருவாகி உள்ளது.
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் திரைகாண உள்ள நிலையில், ஜனவரி முதல் வாரம் இசை வெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இவ்விழாவில் காலஞ்சென்ற நடிகர் சிவாஜியின் குடும்பத்தாரை மேடைக்கு வரவழைத்து கௌரவிக்க முடிவு செய்துள்ளனராம்.
‘பராசக்தி’ சிவகார்த்திகேயனின் 25வது படம் என்பதால் அவரை வைத்து படம் இயக்கிய அனைத்து இயக்குநர்களையும் கௌரவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
‘பராசக்தி’ என்றாலே சிவாஜிகணேசன்தான் நினைவுக்கு வருவார் என்பதால் அவரை கௌரவிக்க படக்குழு விரும்புகிறதாம்.
அதேபோல் இயக்குநர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக நினைவுப்பரிசு வழங்க சிவகார்த்திகேயன் விரும்புவதாகவும் தெரிகிறது.

