இந்தியக் குடியரசு தினத்தையொட்டி, ஆறு புதிய படங்கள் வெளியாக உள்ளன.
இந்த ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 3ஆம் தேதி ஏழு புதுப்படங்கள் வெளியாகின. அடுத்து பொங்கலை முன்னிட்டு நான்கு வெவ்வேறு நாள்களில் ஏழு படங்கள் திரைகண்டன.
இந்நிலையில் ஜனவரி 24ஆம் தேதி ‘பாட்டில் ராதா’, ‘குடும்பஸ்தன்’, ‘பூர்வீகம்’, ‘வள்ளான்’, ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’, ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’ ஆகிய ஆறு படங்கள் வெளியாக உள்ளன.
இதற்கிடையே, ஜனவரி 31ஆம் தேதி ‘அகத்தியர்’ என்ற படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நடிகர்களின் புதுப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் ‘விடாமுயற்சி’ படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

