உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் 'மனிதன்'

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படம் 'மனிதன்'

1 mins read
d006aeba-1c4d-4d49-93a6-7dc9b3f750e7
-

உதயநிதி ஸ்டாலின் அர்ஷத் வர்‌ஷி வேடத்தில் நடிக்கும் புதிய படத்தில் போமன் இரானி வேடத்தில் பிரகாஷ் ராஜ் நடித் துள்ளார். இப்படத்தின் பெரும் பாலான காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன. இறுதிக் கட்ட படப்பிடிப்புகள் நடந்துவரும் போதிலும், இதுவரை இப்படத்திற்குப் பெயரிடப்பட வில்லை. இந்நிலையில் தற்போது இப் படத்திற்கு அதிகாரபூர்வமாக 'மனிதன்' எனப் பெயரிடப்பட் டுள்ளது.

ரஜினி நடிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் கடந்த 1987ஆம் ஆண்டும் வெளியான படம் 'மனிதன்'. இப்படத்தின் பெயர் தற்போது உதயநிதி படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் 'கெத்து' திரைப் படம் நேற்று வெளியாகியுள்ளது. "ஆக்ஷனை கலந்து கட்டி உதயநிதியும் தேவதை போன்று ஏமி ஜாக்சன் அழகாகவும் நடித்திருக்கிறார்கள்.