சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டகால்டி' மற்றும் 'சர்வர் சுந்தரம்' ஆகிய இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியீடு கண்டால் தங்க
ளுக்கு சிக்கல் ஏற்படும் என விநியோகிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 'டகால்டி'யை முதலில் வெளியிடுவது என்றும் அதையடுத்து பிப்ரவரி 14ஆம் தேதி 'சர்வர் சுந்தரம்' படத்தை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற் பாட்டுக்கு இரு படங்களின் தயாரிப்புத் தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய 'டகால்டி' தயாரிப்பாளர் சௌத்ரி, தங்களுக்காக பட வெளியீட்டை ஒத்திவைத்த 'சர்வர் சுந்தரம்' தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.

