தாம் தயாரித்த படத்தை வேண்டுமென்றே முடக்கிவிட்டதாகச் சொல்கிறார் கார்த்திக் மது சூதன். இவர் தயாரித்த படம் 'டூடி'.
அண்மையில் இப்படத்தை வெளியிட்டார் கார்த்திக். தமிழகம் முழுவதும் ஐம்பது திரை அரங்குகளில் வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால் படம் வெளியான பிறகு சில திரையரங்குகளில் காட்சிகளை திடீரென ரத்து செய்துவிட்டன ராம்.
"இதன் மூலம் என் படத்தை ஓடவிடாமல் செய்துவிட்டனர். இதனால் ஒட்டுமொத்தப் படக்குழுவும் சோகத்தில் உள்ளது.
"இதுகுறித்து நான் யாரிடம் போய் முறையிடுவது. அனைவரும் அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வேதனைகளை யார் தீர்ப்பது?
"ஒரே நாளில் என் படம் முடிந்துவிட்டது. வாழ்க்கை இருண்டு போய்விட்டது," என்கிறார் கார்த்திக்.

