குவியும் தொடர் விருதுகள்

1 mins read
c8002a13-ca80-46c3-9ffa-568c7e2247a7
-

சீனு ராமசாமி இயக்கி, விஜய் சேது­ப­தி நடித்துள்ள 'மாம­னி­தன்' திரைப்­ப­டம் ஹைத­ரா­பாத் திரைப்­பட விழா­வில் நான்கு விரு­து­களை வென்­றுள்­ளது. இப்­ப­டம் ஏற்­கெனவே பல அனைத்­து­லக விரு­து­களை வென்­றுள்ள நிலை­யில், தொடர்ந்து விருது வேட்­டை­யாடி வரு­வ­தற்கு திரை­யு­ல­கத்­தி­னர் பாராட்­டும் வாழ்த்­தும் தெரி­வித்­துள்­ள­னர். ஹைத­ரா­பாத் விழா­வில் சிறந்த கதா­நா­யகி, சிறந்த படத்­தொ­குப்­பா­ளர், சிறந்த ஒளிப்­ப­தி­வா­ளர், சிறந்த சாத­னை­யா­ளர் என இப்படம் நான்கு விரு­து­களை வென்றுள்­ளது.