ரஜினிக்காக பாடல் எழுதும் சிவா

ரஜினிக்காக பாடல் எழுதும் சிவா

1 mins read

நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கத்­தில் ரஜினி நடித்து வரும் 'ஜெயி­லர்' படத்­தில் சிவ­கார்த்­தி­கே­ய­னும் (படம்) இணைந்­துள்­ளார். அவர் இந்­தப் படத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­ப­தாக முன்பு தக­வல் வெளி­யா­னது. எனி­னும் அது வெறும் வதந்தி எனப் பின்­னர் தெரி­ய­வந்­தது.

இந்­நி­லை­யில், 'ஜெயி­லர்' படத்­துக்­காக ஒரு பாடலை எழுத உள்­ளா­ராம் சிவா. ரஜி­னி­யின் தீவிர ரசி­க­ரான அவர், இந்த வாய்ப்பு கிடைக்­கும் என எதிர்­பார்க்­கவே இல்லை என்­கி­றார்.

திரைப்­ப­டப் பாடல்­களை எழு­து­வ­தன் மூலம் கிடைக்­கும் பணத்தை மறைந்த பாட­லா­சி­ரி­யர் நா.முத்­துக்­கு­மா­ரின் குடும்­பத்­துக்கு வழங்கி வரு­கி­றார் சிவா.

'ஜெயி­லர்' படப் பாட­லுக்­காக அவ­ருக்கு வழக்­கத்­தை­விட பெரிய தொகை சம்­ப­ள­மா­கப் பேசப்­பட்­டுள்­ள­தாம்.

இதற்­கி­டையே, ரஜி­னிக்­காக அவர் எத்­த­கைய வரி­களை எழு­தப் போகி­றார் எனும் எதிர்­பார்ப்பு கோடம்­பாக்­கத்­தில் அதி­க­ரித்து வரு­கிறது. இளை­யர்­க­ளைக் கவ­ரும் வகை­யில் சிவா வார்த்­தை­க­ளை­யும் வரி­க­ளை­யும் அமைத்து வரு­வ­தா­கத் தக­வல்.

 விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில், விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதாகத் தகவல். நயன்தாராதான் கதாநாயகியாம்.

, : தமிழகத்  