நட்புக்காக நடிக்கும் நாயகிகள்

நட்புக்காக நடிக்கும் நாயகிகள்

1 mins read
7d13ba75-1188-4fa0-8fc7-f1f98cc4e8a3
-

திரி­ஷா­வுக்கு தமிழ்த் திரை­யு­ல­கில் ஏரா­ள­மான தோழி­கள் உள்­ள­னர். புது­முக நடிகை தொடங்கி அனு­ப­வ­முள்ள நாய­கி­கள் வரை அனை­வ­ரு­ட­னும் இயல்­பா­கப் பேசிப் பழ­கு­வா­ராம்.

இந்­நி­லை­யில், வேல்ஸ் நிறு­வ­னம் தயா­ரிக்­கும் புதிய படம் ஒன்­றில், திரிஷா நாய­கி­யாக ஒப்­பந்­த­மாகி உள்­ளார். இதில் கதா­நா­ய­கிக்கு உதவி செய்­யும் மூன்று பெண் கதா­பாத்­தி­ரங்­கள் உள்­ளன. அவற்­றில் மூன்று தமிழ் கதா­நா­ய­கி­கள் நடிக்­கின்­ற­ன­ராம்.

மூவ­ரும் திரிஷா தனிப்­பட்ட வகை­யில் கோரிக்கை விடுக்க, அவர்­கள் உடனே நடிக்­கச் சம்­ம­தித்­த­தா­கத் தக­வல்.