திரைத் துளி­கள்

2 mins read
22242a90-3c1d-48f6-afcf-13f1bc0debc2
-
multi-img1 of 3

 ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா 'லால் சலாம்' படத்தை இயக்கி முடித்திருக்கும் நிலையில், இளைய மகள் சௌந்தர்யாவும் களமிறங்கி உள்ளார். அமேசான் பிரைம் நிறுவனத்துக்காக இணையத் தொடர் ஒன்றை இயக்க அவர் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. மகள் கூறிய கதையைக் கேட்ட ரஜினி, வித்தியாசமான கதைக்களம் என்று பாராட்டியதுடன், அதில் நடிக்க சத்யராஜ்தான் பொருத்தமான நடிகர் என்றும் கருத்து தெரிவித்தாராம்.

வரும் செப்டம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார் சௌந்தர்யா.

 கோடம்பாக்கத்தில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் காட்டில்தான் இப்போது அடைமழை. முன்னணி பட நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போடுகின்றன. ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் ஒதுக்கிய அவர், புதுப் படத்துக்கான பணிகளைத் தொடங்கி உள்ளார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில், திடீரென கமல்ஹாசனின் பட நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு முன்னுரிமை அளிக்கிறாராம் பிரதீப். அது மட்டுமல்ல, பிரம்மாண்ட படங்களுக்கான முகவரியாக உள்ள லைகா நிறுவனத்துக் கும் ஒரு படத்தை இயக்க உள்ளார் பிரதீப்.

 முன்னாள் கிராமத்துக் கதாநாயகன் ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடித்துள்ள 'சாமானியன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. படம் விரைவில் வெளியீடு காணும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த படத்தில் நடிக்கவும் அவர் தயாராகிவிட்டாராம். 'சாமானியன்' பட கதாசிரியர் சொன்ன கதை பிடித்துப்போக, அவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார் ராமராஜன்.

 நயன்தாராவை கைப்பிடித்து ஓராண்டு முடிந்துள்ளதை நினைத்தால் வியப்பாக உள்ளது எனக் கூறியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இதுகுறித்து அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "நேற்றுதான் எங்களுக்குத் திருமணம் ஆனது போலிருக்கிறது. இதற்கிடையில், நண்பர்கள் முதலாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துகளை அனுப்புகி றார்கள். அனைவரது ஆசீர் வாதத்துடனும் அன்புடனும் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கினோம். கடவுளின் ஆசீர் வாதத்துடன் எங்கள் திருமண வாழ்க்கை இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது," என்று விக்னேஷ் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களுடைய இரு குழந்தைகளுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.