‘கிக்’ பட முன்னோட்டம்

‘கிக்’ பட முன்னோட்டம்

படம்: ஊடகம்

18 Aug 2023 - 2:40 pm

1 mins read

சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தில் தன்யா ஹோப் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும், தம்பி ராமையா, கோவை சரளா, மன்சூர் அலிகான், பரமானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வசனங்கள் நகைச்சுவையாகவும் ரசிக்கும்படியும் உள்ளதாக முன்னோட்டக் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் சந்தானம் நடித்து வெளியான ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் நல்ல வசூல் கண்டுள்ளது. அதிலும் ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்து படைத்திருந்தார் சந்தானம்.

குறிப்புச் சொற்கள்