முத்தக் காட்சியில் நடிக்க ரூ.20 லட்சம் கூடுதல் சம்பளம்

முத்தக் காட்சியில் நடிக்க ரூ.20 லட்சம் கூடுதல் சம்பளம்

படம்: ஊடகம்

17 Oct 2023 - 3:20 pm

1 mins read

முத்தக் காட்சியில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா கூடுதல் சம்பளம் பெற்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியில் உருவாகும் ‘அனிமல்’ என்ற படத்தில் ரன்பீர் கபூருடன் நடித்துள்ளார் ராஷ்மிகா.

முத்தக் காட்சி குறித்து இயக்குநர் விவரித்த கையோடு, கூடுதலாக இருபது லட்சம் ரூபாய் அளித்தால் நடிக்கத் தயார் என்றாராம்.

வேறு வழியில்லாமல் படத்தின் தயாரிப்புத் தரப்பு இதற்கு ஒப்புக் கொண்டதாகத் தகவல்.

‘அனிமல்’ படத்தில் இடம்பெறும் மூன்று நிமிடப் பாடல் காட்சியில் மட்டும் ரன்பீர், ராஷ்மிகாவின் மூன்று முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்