ஆதிக் இயக்கத்தில் அஜித்

ஆதிக் இயக்கத்தில் அஜித்

படம்: ஊடகம்

21 Oct 2023 - 2:17 pm

1 mins read

அஜித்தின் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போவது உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.

தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை பிடித்துப்போனதால் அதில் நடிக்க அவர் சம்மதித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

நேர் கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பின்போது தான் அஜித்திடம் இந்தக் கதையை விவரித்தாராம் ஆதிக்.

அதில் சில மாற்றங்களைச் செய்யுமாறு அஜித் கேட்டுக்கொள்ள, அதன்படியே ஆதிக்கும் மாற்றங்களைச் செய்துள்ளார்.

இருவரும் இணைய உள்ள புதுப்படம் குறித்த அறிவிப்பு தீபாவளிக்குப் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்