ஆதிக்கைவிட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர்

ஆதிக்கைவிட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர்

1 mins read
b8c99b30-94ab-475f-a0d8-5e07339f69a6
ஆதிக் ரவிச்சந்திரன். - படம்: ஊடகம்

அண்மையில் திருமணம் புரிந்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை விட பிரபுவின் மகள் ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

நடிகர் சிவாஜியின் பேத்தியும் நடிகர் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யா பிரபுவை காதலித்து கரம்பிடித்து உள்ளார் ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்.

இது ஆதிக்கிற்கு முதல் திருமணமாக இருந்தாலும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

அவருக்கு ஏற்கெனவே கடந்த 2009ஆம் ஆண்டு தனது அத்தை மகன் குணால் என்பவருடன் திருமணம் ஆனது. பின்னர் சொத்து பிரச்சினை காரணமாக குடும்பம் பிரிந்ததால், அவர்களும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

குணால் உடனான விவாகரத்துக்கு பின்னர் ‘கேம் மேக்கிங் கம்பெனி’ ஒன்றை நடத்தி வந்த ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநர் ஆதிக்கிற்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களது திருமணத்தில் ரஜினி, கமல் தொடங்கி விஷால் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ஆதிக்கை விட ஐஸ்வர்யா வயதில் மூத்தவர் என்கிற தகவல் தெரியவந்துள்ளது.

ஆதிக்கிற்கு தற்போது 32 வயதாகும் நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா அவரைவிட 3 வயது மூத்தவர் என கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்