ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமல்ஹாசன்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் கமல்ஹாசன்

படம்: ஊடகம்

20 Dec 2023 - 1:44 pm

1 mins read

‘விக்ரம்’ படத்திற்குப் பிறகு ஓராண்டாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் எந்தப் படமும் வெளிவரவில்லை.

தற்பொழுது ‘இந்தியன் 2’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கமல் நடித்து வருகிறார். அதோடு நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏடி’ படத்திலும் நடிக்கிறார்.

இதுதவிர வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைப்’ படத்திலும் கமல் நடிக்க போகிறார்.

இவற்றில் வினோத் படம் துவங்க தாமதமாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், அண்மைய தகவல்படி ஒரே நேரத்தில் வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் மாறி மாறி கமல் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மார்ச் மாதத்தில் இருந்து இதன் படப்பிடிப்புகள் துவங்கலாம் என்று இரண்டு படப்பிடிப்புக் குழுவும் கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்