பொங்கல் வெளிடு

பொங்கல் வெளிடு

படம்: ஊடகம்

12 Jan 2024 - 4:11 pm

1 mins read

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அருண் விஜய் படங்களைத் தவிர்த்து வேறு எந்த ஒரு உச்ச நட்சத்திரங்களின் படங்களும் வெளியாகவில்லை.

பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாவது வழக்கம்.

கடந்தாண்டு விஜய் நடித்த ‘வாரிசு’, அஜித் நடித்த ‘துணிவு’ உள்ளிட்ட படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின. ஆனால் இந்தாண்டு உச்ச நட்சத்திரங்களின் எந்தப் படமும் வெளியாகவில்லை.

மாறாக வரலாற்று திரைப்படமாக தயாரான தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து வேற்றுகிரகவாசியை கதைக்களமாக கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாரான ‘அயலான்’, அருண்விஜய், எமி ஜாக்சன் நடித்துள்ள ‘மிஷன் அத்தியாயம் ஒன்று’, விஜய் சேதுபதி நடித்த பான் இந்திய திரைப்படமான ‘மெரி கிறிஸ்துமஸ்’ படங்கள் மட்டும் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெள்ளித்திரை காண்கின்றன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்