கைநழுவிய வாய்ப்பு: வருந்தும் சாக்‌ஷி

1 mins read
61bdfcb1-b8f6-4144-879e-a85a2e05eeea
சாக்‌ஷி அகர்வால். - படம்: ஊடகம்

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு கைநழுவிப் போனதை நினைத்தால் வருத்தமாக உள்ளது என்கிறார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

’ராஜா ராணி’ படத்தைத்தான் இவர் குறிப்பிடுகிறார். ஆர்யா நாயகனாக நடித்த அந்தப் படத்தை அட்லீ இயக்க இரண்டாவது நாயகியாக சாக்‌ஷி ஒப்பந்தம் ஆனாராம். அதுமட்டுமல்ல மூன்று நாள்களுக்கு படப்பிடிப்பிலும் பங்கேற்றுள்ளார்.

“அதன் பிறகு மீண்டும் அழைப்பதாகக் கூறி இருந்தனர். நானும் படப்பிடிப்புக்காக ஒதுக்கிய நாள்களில் அழைப்புக்காக காத்துக்கிடந்தேன். ஆனால் என்னை அழைக்காமலேயே படத்தை முடித்து வெளியிட்டு விட்டனர்.

“இந்தப் படம் எனக்குக் கிடைத்த மிக நல்ல வாய்ப்பு. ஆனால் எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. என்னால் நடிக்க முடியவில்லை. இனி அதுகுறித்து பேசவும் ஆராயவும் நான் விரும்பவில்லை,” என்கிறார் சாக்‌ஷி அகர்வால்.

குறிப்புச் சொற்கள்