உடல்நலம் குன்றிய நகைச்சுவை நடிகருக்கு உதவிய சிம்பு

உடல்நலம் குன்றிய நகைச்சுவை நடிகருக்கு உதவிய சிம்பு

படம்: ஊடகம்

27 Jun 2024 - 8:21 pm

1 mins read

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டைப் பயிற்சி கலைஞராக திரையுலகில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வருகிறார் அவர்.

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வெங்கல் ராவ், வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார்.

ஏற்கனவே சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ், காணொளி ஒன்றை இணையத்தில் வெளியிட்டார். அதில்,தனக்கு ஒரு கையும் ஒரு காலும் வேலை செய்யவில்லை என்றும் பேசக்கூட முடியாமல் சிரமப்படுவதாகவும் திரைப்பட நடிகர்கள் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

சமூக வலைத்தளங்களில் பரவலான இந்தக் காணொளியைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்த நிலையில், நடிகர் சிம்பு, வெங்கல் ராவுக்கு ரூ.2 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார். தனது உதவியாளரை அனுப்பி வெங்கல் ராவுக்கு ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

நிதி உதவியைப் பெற்றுக்கொண்ட வெங்கல் ராவ், நடிகர் சிம்புவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சின்னத்திரை நடிகர் பாலா, ரூபாய் ஒரு லட்சமும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் ரூபாயும் வெங்கல் ராவுக்கு நிதியுதவி வழங்கியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்