விஜய் சேதுபதியுடன் இணையும் நித்யா மேனன்

விஜய் சேதுபதியுடன் இணையும் நித்யா மேனன்

2 mins read
05463b77-5d5c-4dd6-8078-64b9d9dee66a
நடிகை நித்யா மேனன் - படம்: சமூக ஊடகம்

பிரபல நடிகர் விஜய் சேதுபதியுடன் மீண்டும் நித்யா மேனன் இணைந்து நடிக்கவுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் முன்னணி நடிகர்களாக நடிக்கும் படம் ஒன்று உருவாக உள்ளது. நித்யா மேனன் கொடுத்த பேட்டி ஒன்றில் இது குறித்து தகவல் வெளியிட்டார்.

வித்தியாசமான கதைக்களம் கொண்டது அந்தப் படம் என்றும் அவர் உறுதி செய்துள்ளார்.

ஏற்கெனவே ‘19 (1) (ஏ)’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் இணைந்து நடித்துள்ளனர். மீண்டும் அவர்கள் ஒரு படத்தில் இணைவது குறித்து நித்யா மேனன் பேசுகையில் “அந்தப் படத்தில் நானும் சேதுபதி அவர்களும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் மிகக் குறைவு. இரண்டு நாள்கள் மட்டுமே அதன் படப்பிடிப்பு நடந்தது. அப்படப்பிடிப்பின் போது நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்று பேசி இருந்தோம். இப்போது இருவரும் இணைந்து நடிக்கப் போகும் கதையைவிட வேற ஒரு நல்ல கதை எங்களுக்குக் கிடைக்காது. இந்தப் படத்தில் நடிப்பதை நான் மிகவும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன். மிகவும் தனித்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன். வழக்கமாக நான் நடிப்பதைக் காட்டிலும் இது மிகவும் வித்தியாசமானது. பல வகையான கதைக்களத்தில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்” என சொன்னார் நடிகை நித்யா மேனன்.

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இந்தப் படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பரோட்டா மாஸ்டராக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்காக அவர் பிரத்யேகமாக பயிற்சி எடுத்துள்ளாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இவ்வாரத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.

தொடர்புடைய செய்திகள்

இதனால் நித்யா மேனனின் அடுத்தடுத்த படங்கள் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. நடிகை நித்யா மேனன் தமிழில் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஆறுமுக குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஏஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திவிஜய் சேதுபதிதனுஷ்