சூர்யாவின் கண்கள் நிறைய பேசும்: கிரித்தி ஷெட்டி

1 mins read
c3e0805b-fe01-4032-859e-ac5d1874f719
கிரித்தி ஷெட்டி. - படம்: peakpx இணையத்தளம்

நடிகர் சூர்யாவின் கண்கள் நிறைய பேசும் என்று கூறியுள்ளார் கிரித்தி ஷெட்டி.

சூர்யாவுடன் நடித்த அனுபவம் குறித்து அண்மைய பேட்டியில், “சூர்யாவுடன் நடிக்கும்போது ஒரு வகுப்பறையில் இருப்பதைப் போன்று உணர்வேன். அவரது முகபாவங்களில் இருந்தே நடிப்பின் பல நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

“அவரது கண்களும்கூட நிறைய பேசும். ‘வணங்கான்’ படம் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில்தான் கைவிடப்பட்டது. அந்தப் படம் முழுமையடையாத வருத்தம் இன்னும் என் மனத்தில் உள்ளது,” என்கிறார் கிரித்தி ஷெட்டி.

இவர் தற்போது கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்