மனித தீர்ப்பை தொழில்நுட்பம் மாற்றக்கூடாது: தலைமை நீதிபதி

1 mins read
15f3c415-9fe3-4504-ab36-c57d8410bbf0
நீதிபதி சூர்யகாந்த். - படம்: டைனமைட் நியூஸ்

புதுடெல்லி: தொழில்நுட்பம் என்பது மனித தீர்ப்பை மேம்படுத்த வேண்டுமே தவிர அதை மாற்றக்கூடாது என்று இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், ‘கொவிட்’ நெருக்கடியின்போது தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதையும் மறக்கக்கூடாது என்றார்.

“இருப்பினும், ஏழைகள், முதியவர்கள் அல்லது மின்னிலக்க அறிமுகம் இல்லாதவர்களை விலக்குவது சீர்திருத்தம் அல்ல. அதை வெறும் பின்னடைவாக மட்டுமே கருத வேண்டும்.

“எனவேதான், தொழில்நுட்பம் நீதியின் ஊழியராக இருக்க வேண்டுமே தவிர அது நீதிக்கு மாற்று அல்ல என்று எப்போதும் கூறி வருகிறேன். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் விசாரணை நீதிமன்றம் முதல் அரசியலமைப்பு நீதிமன்றம் வரை நீதித்துறை கட்டமைப்பின் ஒவ்வொரு மட்டத்தையும் அடைக்கின்றன,” என்றார் திரு சூர்யகாந்த்.

பல்வேறு நீதிமன்றங்களில் தாம் எதிர்கொண்ட அனுபவங்களை விவரித்த தலைமை நீதிபதி, நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாகத் தீர்க்க மத்தியஸ்தம் செய்வது மிகப்பெரிய சாத்தியக்கூறு என்று கூறினார்.

லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) அமைப்பைச் சுட்டிக்காட்டிய அவர், உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு மிகவும் பயனுள்ள அடிமட்ட நீதி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மக்கள் நீதிமன்றம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்