மீனவர்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ‘தமிழினி’ படம்

மீனவர்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ‘தமிழினி’ படம்

படம்: தினமலர்

27 Nov 2026 - 10:11 pm

1 mins read

டி.பி. சரவணன், விஜிலா சரவணன் தயாரிப்பில், கணேஷ் மூர்த்தி எழுதி இயக்கியுள்ள படம் ‘தமிழினி’. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் காணொளிப் படைப்பாளருமான விஜே ஆஷிக், பிரதீப் ராஜ் ஆகியோர் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

‘என்ன விலை’ திரைப்படத்தில் அண்மையில் நடித்த ஷாஷா சிவகுமார், புஷ்பலதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் தீபா சங்கர், பெஞ்சமின், வின்சென்ட் டி.பி. சரவணன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி புகழ் சந்தோஷ் பாலாஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் வெங்கட், சரண்யா கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது, “கடலோர மீனவ சமூகத்தின் பின்னணியில் குடும்பம், காதல், இழப்பு, பொறுப்பு ஆகியவற்றின் உணர்வுப்பூர்வமான களத்தை இப்படம் பேசுகிறது.

தனிப்பட்ட மகிழ்ச்சிக்கும், தங்களைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலத்திற்கும் இடையே தேர்வு செய்ய வேண்டிய இக்கட்டான சூழலில் மனிதர்கள் எத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதே இப்படத்தின் மையக்கரு.

மீனவக் குடும்பங்களிடம் காணப்படும் மன உறுதியையும் வலிமையையும் இப்படத்தில் பேச விரும்பினேன். குறிப்பிட்ட ஒரு வாழ்க்கை முறையின் பின்னணியில் கதை அமைந்திருந்தாலும், இதில் பேசப்படும் உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானவை” என்றார்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திதமிழ்சென்னைதமிழ்நாடு