தனுஷின் அடுத்த படத்தின் தயாரிப்பில் மாற்றம்

தனுஷின் அடுத்த படத்தின் தயாரிப்பில் மாற்றம்

படம்: இந்திய ஊடகம்

30 Nov 2025 - 1:23 pm

1 mins read

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி நடிக்க இருக்கும் படத்தில் மம்முட்டியின் சம்பளத்தால் தயாரிப்புக் குழு மாறி இருக்கிறது.

விக்னேஷ் ராஜா படத்தினை முடித்துவிட்டு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டியின் சம்பளம், தயாரிப்புச் செலவு, சம்பளம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் பெரிய பட்ஜெட் வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில், இதன் தயாரிப்புப் பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம்.

அதனைத் தொடர்ந்து தனுஷின் வொண்டர்பார் நிறுவனமே தயாரிக்கலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டது. ராஜ்குமார் பெரியசாமியின் முந்தைய படமான ‘அமரன்’ படத்தினைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனமும் தற்போது இப்படத்தினைத் தயாரிக்க பேச்சு வார்த்தையில் இறங்கியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாஇயக்குநர்