அஜித்துடன் ஸ்பெயின் நாட்டில் நடந்து வந்த படப்பிடிப்பில் பங்கேற்ற திரிஷா, தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்கு, அவர் முன்பே கால்ஷீட் ஒதுக்கியிருந்தாராம்.
இப்போது அஜித்திடமும் படக்குழுவினரிடமும் இதற்காக அனுமதி பெற்று சென்னை வந்துள்ளார். விளம்பரப் படப்பிடிப்பு முடிந்த கையோடு மீண்டும் ஸ்பெயின் பறக்க உள்ளார் திரிஷா.
‘லியோ’, ‘கோட்’ ஆகிய படங்களை அடுத்து, ‘விடாமுயற்சி’, ‘தக் லைஃப்’, ‘குட் பேட் அக்லி’, ‘விஸ்வாம்பரா’, ‘எவிடன்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.