‘காக்கா முட்டை’, ‘கடைசி விவசாயி’ போன்ற தரமான படங்களைத் தந்தவர் மணிகண்டன்.
முதன்முறையாக இவரும் அடிதடி உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் இயக்கும் அடிதடிகள் நிறைந்த இணையத்தொடரில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி இத்தகவலை வெளியிட்டார்.
‘காட்டான்’ கதையை தன்னுடைய நண்பரான மணிகண்டன்தான் எழுதினார் என்றும் இந்த இணையத்தொடருக்கான கதையின் முதல் ஆறு பக்கத்தைப் படித்தபோது, அது தனக்குள் சென்று தன்னை குணப்படுத்துவது போன்ற உணர்வைக் கொடுத்தது என்றும் கூறினார்.
‘காட்டான்’ இணையத்தொடரில் நடிப்பதுடன் அதைத் தயாரித்தும் உள்ளார் விஜய் சேதுபதி.

