உண்மைக் கதையில் விக்ரம் பிரபு

1 mins read
60811781-8b1a-4e33-b3db-5172b99c5bbb
‘சிறை’ படத்தில் போலிசாக நடித்திருக்கும் விக்ரம் பிரபு. - படம்: தினமணி

நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த ‘டாணாக்காரன்’ படத்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடிக்கிறார்.

காவல்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சிறை’ என்ற பெயரில் எழுதிய கதையே தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதனை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்‌ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார்.

வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, “முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் இது.

“இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை எழுதியுள்ளார்.

“முற்றிலும் புதிய களத்தில் புதிய கதையாக இந்தப் படம் அமையும். ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தையும் கொடுக்கும்,” என்று தெரிவித்தார்.

‘சிறை’ திரைப்படம் இம்மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்