அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் நடைபெறும் அனைத்துலக மாநாடு வரும் சனி, ஞாயிறு இருநாள்களும் (நவம்பர் 28, 29) நோவோட்டல் சிங்கப்பூர் ஆன் ஸ்டீவன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) நடைபெறும் நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை; மனிதவளத் துணையமைச்சரும் தென்கிழக்கு மாவட்ட மேயருமான தினேஷ் வாசு தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
சிங்கப்பூரிலும் உலகெங்கிலும் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை ஒன்றிணைத்து, தொடர்புகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் கட்டமைப்பை விரிவுபடுத்தவும், சிறப்புப் பேச்சாளர்கள், முன்னாள் மாணவர் தலைவர்களின் உரைகளைக் கேட்கவும் இம்மாடு வகைசெய்கிறது.
மேல்விவரங்களுக்கு திரு மூர்த்தியை 9457 1409 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
