மணக்கும் மல்லிகை, மயக்கும் மதுரை

மணக்கும் மல்லிகை, மயக்கும் மதுரை

1 of 6
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி
படம்: த.கவி

28 Nov 2026 - 5:30 am

2 mins read

தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரைக்குச் செல்ல, சிங்கப்பூரிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு நான்கரை மணி நேர விமானப் பயணமும் அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரச் சாலைப் பயணமும் தேவைப்படுகிறது.

ஒருவர் இரு கைகளால் சேர்த்து அணைத்தாலும் கைகளுக்குள் அடங்காத பெருந்தூண்களும் கட்டடக் கலையழகும் கொண்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுப்பயணிகளையும் படப்பிடிப்பிற்காகத் திரைத்துறையினரையும் ஈர்ப்பதில் வியப்பேதும் இல்லை.
ஒருவர் இரு கைகளால் சேர்த்து அணைத்தாலும் கைகளுக்குள் அடங்காத பெருந்தூண்களும் கட்டடக் கலையழகும் கொண்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுப்பயணிகளையும் படப்பிடிப்பிற்காகத் திரைத்துறையினரையும் ஈர்ப்பதில் வியப்பேதும் இல்லை. - படம்: த.கவி

ஸ்கூட் நிறுவனத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இந்தியா ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கிறது என்று தென்னிந்தியாவிற்கான ஸ்கூட் நிறுவனத்தின் பயணிகள் விற்பனைப் பிரிவு மூத்த மேலாளர் பி.நிதின் தெரிவித்தார். இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நெருக்கமான குடும்ப, பண்பாட்டுப் பிணைப்புகளால் அங்குப் பயணிகளுக்கான தேவை வலுவாக உள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

புகழ்பெற்ற அழகர் கோவிலின் முன்புறத்தில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலின் நடை ஆண்டுக்கு ஒருமுறை ஆடிப் பௌர்ணமியன்று திறக்கப்படும்.
புகழ்பெற்ற அழகர் கோவிலின் முன்புறத்தில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவிலின் நடை ஆண்டுக்கு ஒருமுறை ஆடிப் பௌர்ணமியன்று திறக்கப்படும். - படம்: த.கவி

அமிர்தசரஸ், சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இந்திய நகரங்களுக்கு ஸ்கூட் நிறுவனம் தற்போது விமானங்களை இயக்கி வருகிறது. இது சிங்கப்பூரர்களுக்கு இந்தியாவின் வடக்கு, தெற்குப் பகுதிகளுக்கு நேரடி விமானப் பயண வாய்ப்பை வழங்குகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை அழகர்மலையில் அமைந்துள்ளது. இங்கு அவர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலை அழகர்மலையில் அமைந்துள்ளது. இங்கு அவர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். - படம்: த.கவி
மொத்த விற்பனைச் சந்தை முதல் சாலையோரக் கடைகள் வரை வாழைத்தாறுகளைக் காண முடிகிறது.
மொத்த விற்பனைச் சந்தை முதல் சாலையோரக் கடைகள் வரை வாழைத்தாறுகளைக் காண முடிகிறது. - படம்: த.கவி

மூத்த சிங்கப்பூரர்கள் தங்களது வேர்களுடன் தொடர்பில் இருக்க ஊக்குவிக்கும் ஸ்கூட் நிறுவனத்தின் ‘லெட்ஸ் கோ ஹோம்’ இயக்கத்தின்மூலம், சிங்கப்பூரிலிருந்து ஏறத்தாழ 3,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையின் அழகைப் படம்பிடிக்க தமிழ் முரசு பயணம் மேற்கொண்டது.

நிழற்படம் எடுக்கப்போவதாகச் சொன்னதும் வெள்ளந்திச் சிரிப்போடு முகமலர்ச்சியுடன் தோன்றி, அவ்விடத்தையே கலகலப்பில் ஆழ்த்திய மூத்த தலைமுறையினர்.
நிழற்படம் எடுக்கப்போவதாகச் சொன்னதும் வெள்ளந்திச் சிரிப்போடு முகமலர்ச்சியுடன் தோன்றி, அவ்விடத்தையே கலகலப்பில் ஆழ்த்திய மூத்த தலைமுறையினர். - படம்: த.கவி

2026 செப்டம்பர் மாதத்தில் குடமுழுக்கு விழா நடைபெற்ற ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முதல் மலைப்பகுதியில் பதினெட்டாம்படி கருப்பணசாமி திருக்கோவில்வரை அங்கு பல வழிபாட்டுத் தலங்கள் இங்கு உள்ளன. அழகர் கோவில், பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், ராக்காயி அம்மன் கோவில் ஆகிய மூன்று கோவில்களும் அழகர் மலையில் அமைந்துள்ளன.

பரபரப்பான மதுரை நகருக்குள் மூழ்குவதற்கும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு விரைந்து செல்வதற்கும் ஆட்டோ ரிக்‌ஷாவே ஆகச் சிறந்த வழி.
பரபரப்பான மதுரை நகருக்குள் மூழ்குவதற்கும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு விரைந்து செல்வதற்கும் ஆட்டோ ரிக்‌ஷாவே ஆகச் சிறந்த வழி. - படம்: த.கவி

புத்தம் புதிய மல்லிகைப் பூவின் நறுமணத்திற்கும் சுடச் சுடத் தயாராகும் பன் பரோட்டாவின் ஓசைக்கும் இடையே, மதுரையின் இரவுச் சந்தைகளிலும் தெருவோர உணவுக் கடைகளிலும் உங்களைத் தொலைக்காமல் அந்தப் பயணம் முழுமையடையாது. டிசம்பர் விடுமுறைக் காலம் வந்துவிட்ட வேளையில், இந்தப் படங்கள் உங்களையும் அங்குச் செல்லத் தூண்டக்கூடும்.

மதுரை வீதிகளில் நடந்தபடியே பொம்மைகளை விற்கும் வணிகர்.
மதுரை வீதிகளில் நடந்தபடியே பொம்மைகளை விற்கும் வணிகர். - படம்: த.கவி
வேகவைத்த மொச்சை, சோளம், கடலை ஆகியவற்றை விற்கும் தள்ளுவண்டிகள் இரவில் மதுரை வீதிகளில் நடமாடும் பலருக்கு நிறைவான அனுபவத்தைத் தருகின்றன.
வேகவைத்த மொச்சை, சோளம், கடலை ஆகியவற்றை விற்கும் தள்ளுவண்டிகள் இரவில் மதுரை வீதிகளில் நடமாடும் பலருக்கு நிறைவான அனுபவத்தைத் தருகின்றன. - படம்: த.கவி
குறிப்புச் சொற்கள்