சட்டம், நமக்காக!

சட்டம், நமக்காக!

சட்டங்களை எளிமையாக விவரிக்கும் புதிய காணொளித் தொடர்
படம்: ஹானா லா ஃபர்ம்ஸ்

10 May 2026 - 6:50 am

1 mins read

பொதுவாக, சட்டம் என்றாலே நம்மில் பலருக்கு அதிகம் புரியாமல் இருக்கக்கூடும்.

சட்டங்கள் சிக்கலான, எளிதில் புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதப்படுகின்றன என்ற கருத்தும் உண்டு. அதேவேளை, பொதுமக்கள் சட்டங்களை நன்கு அறிந்திருப்பதும் முக்கியம்.

குறிப்பாக, பொதுமக்களை அதிகம் பாதிக்கக்கூடிய சட்டங்களுக்கு இது பொருந்தும். நீண்டகால அதிகாரப் பத்திரம் (எல்பிஏ), மணவிலக்கு, குடும்ப வன்முறை, வெளிநாட்டு ஊழியர்கள், சிறிய, நடுத்தர நிறுவனங்கள், வெளிநாடுகளில் சொத்து வாங்குவது போன்ற விவகாரங்களுக்கான சட்டங்கள் அவற்றில் அடங்கும்.

புதிய காணொளித் தொடரின் மூலம் இதுபோன்ற சட்டங்களை நம் அனைவருக்கும் எளிதில் புரியவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தமிழ் முரசு.

‘சட்டம், நமக்காக’ தொடரில் ஆறு வழக்கறிஞர்கள் பேசுகின்றனர். ஒவ்வொரு காணொளியிலும் அதிகபட்சமாக ஐந்து நிமிடங்களுக்குள் அந்தந்தச் சட்டத்தைப் பற்றிச் சுருக்கமாக விவரிக்கின்றனர்.

(These two lines will change every week) வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதிய பாகம் வெளியிடப்படும். மே மாதம் ஒன்பதாம் தேதி வெளியாகும் முதல் பாகத்தில் குடும்ப வன்முறை தொடர்பான சட்டங்களைப் பற்றி விவரிக்கிறார் வழக்கறிஞர் கந்தன் ராகவேந்திரா.

‘சட்டம், நமக்காக’ தொடரைத் தமிழ் முரசின் செயலி, இணையத்தளம், சமூக ஊடகப் பக்கங்களில் காணலாம்.

தமிழ் முரசுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!

குறிப்புச் சொற்கள்
சமூகம்சட்டம்காணொளிதமிழ் முரசு