எழுத்தாளர் ஜோசபின் சியாவுடன் இலக்கியக் கலந்துரையாடல்

எழுத்தாளர் ஜோசபின் சியாவுடன் இலக்கியக் கலந்துரையாடல்

கவிமாலை நடத்தும் மாதாந்தரச் சந்திப்பு
கோப்புப்படம்

25 Sep 2026 - 5:30 am

1 mins read

கவிமாலை சார்பில் நடைபெறும் மாதாந்தரச் சந்திப்பில், புகழ்பெற்ற சிங்கப்பூர் எழுத்தாளர் ஜோசபின் சியா கலந்துகொண்டு தமிழ் வாசகர்களுடன் இலக்கியக் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

‘கம்போங் சிறுமியிலிருந்து புகழ்பெற்ற எழுத்தாளர் வரை’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வு, சனிக்கிழமை (செப்டம்பர் 26) மாலை 6 மணிக்கு சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஐந்தாம் தளத்தில் உள்ள பாசிபிலிட்டி அறையில் நடைபெறுகிறது.

ஜோசபின் சியாவின் எழுத்துப் பயணம், அனுபவங்கள், படைப்புகள், இலக்கியப் பார்வைகள் குறித்து தமிழ் வாசகர்களுடன் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. இக்கலந்துரையாடலை வெள்ளி நிலா வழிநடத்துகிறார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கும் நிகழ்வும் இடம்பெறும். முன்னதாக நடத்தப்பட்ட போட்டிகளில் இடம்பெற்ற கவிதைகளின் வாசிப்பும் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளன.

அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்
கவிமாலைகலந்துரையாடல்சந்திப்பு