தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு தேர்வு

1 mins read
23597d8a-594d-4851-884a-35633394ffe7
தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள். - படம்: தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்

தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் (சிங்கப்பூர்) 76/77ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்கு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) நடைபெற்றது. 2025 முதல் 2027 வரையிலான தவணைக் காலத்துக்குப் புதிய நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.

சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

தலைவர்: ஓய்.எஸ். செய்யது யூசுப்ஷா, துணைத் தலைவர் எஸ். செய்யது முபாரக், செயலாளர்: இ.எம். சாகுல் ஹமீது, துணைச் செயலாளர்: ஓ. யாசிர் அராபத், இணைச் செயலாளர்: எம். அப்துல் லத்தீப், பொருளாளர்: ஹாஜி பி.எம். சேக் எஜமானி ஆகியோருடன் கணக்காளர், மக்கள் தொடர்பாளர், பத்து செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசகராக ஹாஜி. டாக்டர் கே.எம். தீனும் தேர்வு செய்யட்டனர்.

குறிப்புச் சொற்கள்