சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் காப்பியவிழா

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களத்தின் காப்பியவிழா

படம்: சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்

09 Oct 2026 - 7:20 am

1 mins read

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் ஆண்டுதோறும் நிகழ்த்தும் காப்பியவிழா அக்டோபர் 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தேசிய நூலகத்தில் 16ஆம் மாடியில் உள்ள தி பாட் அரங்கில் நடைபெறும்.

விழாவில் உரையரங்கம், சரோஜினி செல்லக்கிருஷ்ணனின் சிறப்புரையும் இடம்பெறும். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர் இரா.தினகரனும் ஜோதிமாணிக்கவாசகமும் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்வில் நாட்டியம், கவியுரை நோக்கவுரை, அறிமுகவுரை, சமூகம், மொழி, பொதுச் சேவை என பிற பணிகளில் சிறந்தோங்கும் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்பெறும் இளங்கோவடிகள் விருது வழங்குதல் என தமிழ்மொழி சார்ந்த அனைத்தும் நிகழும்.

விழாவின் முடிவில் இரவு உணவு உபசரிப்பு உண்டு.

குறிப்புச் சொற்கள்