ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கத்தின் கலாசாரக் கண்காட்சிகள்

ஆ. விஷ்ணு வர்­தினி

ஆசிய நாகரிக அரும்­பொருளகம், நல்­வாழ்வு போதிக்­கும் மர­பு­டை­மை­யை­யும் கலா­சா­ரக் கூறு­களையும் மக்­க­ளுக்­காக ஒருங்­கிணைத்­துள்­ளது.

‘பாடி அண்ட் ஸ்பி­ரிட் என்ற சிறப்­புக் கண்­காட்சி, ‘ஆர்ட் ஆஃப் வெல்­னெஸ் விழா ஆகி­ய­வற்­று­டன், ‘புத்தா ரெலிக்ஸ், ‘வேல்­வேல்’ என்ற இரு சிறிய கண்­காட்­சி­க­ளை­யும் மக்­கள் காண­லாம்.

இம்­மா­தம் முதல் இரு வார இறு­தி­களில் நடந்­தே­றிய ‘ஆர்ட் ஆஃப் வெல்­னெஸ்’ விழா, மன­ந­ல­னைப் பேணு­வ­தற்­கான பல­த­ரப்­பட்ட வாழ்­வி­யல் முயற்சி­களை மக்­க­ளுக்­குப் பயி­ல­ரங்கு­களின் மூலம் அறி­மு­கப்­படுத்­தி­யது.

அரும்­பொ­ரு­ளக இரண்­டாம் தளத்­தில் அமைந்­துள்ள ‘மைண்ட்­ஃபுல்­னஸ் லேப், நவீன முறை­யி­லான மன­ந­லப் பழக்­கங்­களை நேர­டி­யாக அனு­ப­விக்­கும் வாய்ப்­பி­னைத் தரு­கிறது.

வர­லாற்­றிலும் மர­பு­டை­மை­யிலும் எவ்­வ­கை­யான நல்­வாழ்வு ஆலோ­ச­னை­கள், வரை­ய­றை­கள் உள்­ளன என்­பதைக் காட்­டும் ‘பாடி அண்ட் ஸ்பி­ரிட்’ சிறப்­புக் கண்­காட்­சி­யில், பல்­வேறு சம­யங்­களின் 100க்கும் மேற்­பட்ட கலைப்­பொருட்­களை மக்­கள் காண­லாம்.

இஸ்­லா­மிய, இந்து, பௌத்த சம­யத்­தி­ன­ரின், மலை­வாழ் மக்களின் மர­பு­க­ளைத் தெரிந்து கொள்வதற்கு இவை உத­வும்.

சிங்­கப்­பூ­ரில் தைப்­பூச விழா­வின் வர­லாற்­றை­யும் கொண்­டாட்ட வழக்­கங்­க­ளை­யும் காட்­டும் ‘வேல்­வேல்’ கண்­காட்சி, காவடி வகை­கள், விரத முறை­கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்கி­யுள்­ளது. தொடக்க கால தைப்­பூ­சப் படக்­காட்­சி­கள், வெவ்­வேறு வகை­யான அல­கு­கள் முத­லி­யவை இக்­கண்­காட்­சி­யில் இடம்­பெ­ற்று இருக்­கின்­றன.

“நல்­வாழ்வை மையப்­ப­டுத்தி இவ்­வாண்டு புதிய முறை­யில் கண்­காட்­சி­க­ளை­யும் நிகழ்ச்­சி­க­ளை­யும் ஏற்­பாடு செய்­துள்­ளோம்,” என்று ஆசிய நாகரிக அரும்பொரு­ள­கத்­தின் கல்­விப்­ பி­ரிவு துணை நிர்வாகி மெலிசா விஸ்­வானி தெரி­வித்­தார்.

ஆசிய நாகரிக அரும்­பொ­ரு­ள­கத்­தின் இம்­மு­யற்­சி­கள் மக்­களுக்குப் பய­ன­ளிக்­கும் என அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

இக்­கண்­காட்­சி­கள் அடுத்­தாண்டு மார்ச் 26ஆம் தேதி வரை நீடிக்­கும். டிசம்­பர் 31ஆம் தேதி வரை நுழை­வுச்­சீட்டு சலுகைகளை மக்­கள் நாட­லாம்.www.acm.org.sg. முகவரியில் மேல் விவ­ரங்­களைப் பெறலாம்.

vishnuv@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!