65 வயதிலும் துடிப்புடன் சேவையாற்றும் கணேசன்

4 mins read
90517f5c-7f7c-4ded-8a79-3c95dcca506f
-

ஆ. விஷ்ணு வர்­தினி

தேசிய காற்­பந்து விளை­யாட்­டா­ள­ராக, விமா­னி­யாக, இளை­யர்­க­ளுக்கு வழி­காட்­டி­யாக, திரு வெள்ளைச்சாமி கணே­சன் பல்­வேறு துறை­களில் காலூன்றி தடம் பதித்­துள்­ளார். 1970களில் 'லயன்ஸ்' சிங்­கப்­பூர் தேசிய காற்­பந்து அணி­யில் விளை­யாட்­டா­ள­ராக இணைந்த இவர், ப்ரீ ஒலிம்­பிக்‌ஸ் உட்­பட பல்­வேறு போட்­டி­களில் பங்­கேற்­றார். குறிப்­பாக, 1977ல் நடந்த மலே­சியா கப் போட்­டி­யில் சிங்­கப்­பூ­ரைப் பிரதி­நி­தித்­துப் போட்­டி­யிட்ட விளை­யாட்டு வீரர்­களில் திரு கணே­ச­னும் ஒரு­வர். 12 ஆண்­டு­களில் முதல் முறை­யாக சிங்­கப்­பூர் அணி மலே­சியா கப் போட்­டி­யில் வெல்­வ­தற்­குக் கார­ண­மாக அமைந்து, சிங்­கப்­பூ­ருக்­குப் பெருமை சேர்த்­தார் திரு கணே­சன்.

ஒரு சிங்­கப்­பூ­ர­ராக அப்­போட்­டி ­யில் விளை­யாடி வெற்­றிப்­பெற்­றது தனக்­குக் கிடைத்­த பெரிய அங்­கீ­கா­ர­மா­கக் கரு­தி­னார் அவர். அவ்­வெற்­றி­யின் மூலம் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும், சிங்­கப்­பூ­ரில் வாழும் தமி­ழர்­க­ளுக்­கும், பெரு­மை­யும் மகிழ்ச்­சி­யும் சேர்த்­த­தை­யும், தன்­னால் முடிந்த அள­வில் இள­மை­யி­லேயே நாட்­டிற்­குப் பங்­காற்ற முடிந்­ததையும் அவர் நினை­வு­கூர்ந்­தார்.

"மக்­கள் என்னை அடை­யா­ளம் கண்டு என்னை வாழ்த்­தத் தானா­கவே முன்­வந்­த­னர். அந்­நி­னை­வு­கள் மிக இன்­ப­மா­னவை. ஆனால், அத­னை­விட எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்­தது, சாதா­ர­ண பின்­ன­ணி­யி­லி­ருந்து வந்த என் பெற்­றோ­ருக்கு நான் பெருமை சேர்த்துதான். என்னை வாழ்த்த வந்­தோர், என் பெற்­றோ­ரை­யும் பாராட்­டிச் சென்­ற­னர். குறு­கிய காலக்­கட்­டத்­தில் ஓர் இளை­ய­ராக சிங்­கப்­பூ­ரின் விளை­யாட்­டுத் துறை­யில் நான் உயர்ந்­த­தைப் பல­ரும் பாராட்டி ஆத­ர­வ­ளித்­த­தை­யும் என்­னால் மறக்க இய­லாது," என்று திரு கணே­சன் கூறி­னார்.

விளை­யாட்­டுத் துறை­யில் ஏறக்­கு­றைய பத்து ஆண்­டு­க­ளுக்­குத் திறம்­பட பணி­யாற்­றி­யபின், 1984ஆம் ஆண்­டில் அவர் குடும்ப நலன் கருதி அத்­து­றை­யி­லி­ருந்து விலக வேண்­டி­ய கட்­டா­யம் ஏற்­பட்­டது. எட்­டுப் பேர் கொண்ட தனது குடும்­பத்­துக்கு வரு­மா­னம் ஈட்­ட­வேண்­டிய நிலை­யில் அவர் இருந்­தார். அம்­மு­டிவு ஒரு முற்­றுப்­புள்­ளி­யாக இல்­லா­மல் ஒரு புதிய ஆரம்­பத்­துக்கு இட்­டுச்­சென்­றது. விமா­னப் பொறி­யி­யல் நிபு­ண­ரா­கப் பணி­யாற்­றிய அவ­ரது அனு­ப­வத்­தின் தொடர்ச்­சி­யாக 1985ஆம் ஆண்­டில், ஸ்காட்­லாந்­தில் பயிற்சி மேற்­கொண்­ட­தன் பின்­னர், அவர் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் நிறு­வ­னத்­தில் விமா­னி­யாக இணைந்­தார். அவ­ரது 43 ஆண்டு சேவைக்­குப் பின், தற்­போது 65 வய­தில் பணி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றுள்­ளார்.

"ஓய்வு பெற­வேண்­டிய கட்­டா­யம் இல்­லை­யெ­னில், நான் இன்­ன­மும் விமா­னம் ஓட்­டிக்­கொண்­டு­தான் இருக்க ஆசை. இருப்­பி­னும், என்­னால் முடிந்த வகை­களில் இன்­னும் இத்­து­றைக்­குப் பங்­காற்ற முயன்று வரு­கி­றேன். என்­னோடு இத்­து­றை­யில் பய­ணித்­த சக ஊழி­யர்­களும், என்­னோடு கலந்­து­ரை­யாடி மகி­ழும் இளைய விமா­னி­களும், என்­னோடு செல­வி­டும் நேரத்­தில் உத்­வே­கம் அடை­கின்­ற­னர் என்­பது எனக்கு நிறை­வைத் தரு­கின்­றது. என்னிடம் இருந்து ஏதே­னும் ஒரு விஷ­யத்­தைக் கற்­றுக்­கொள்­வ­தாக அவர்­கள் சொல்­வ­துண்டு. அத்­த­கைய கருத்­துகள் என்னை மேன்­மே­லும் பங்­காற்ற ஊக்­கு­விக்­கின்­றன." என்­றார் திரு கணே­சன்.

பணி­யி­லி­ருந்து மட்­டுமே ஓய்வுபெற்­றுள்ள திரு கணே­சன், தனது வாழ்­வில் மேன்­மே­லும் துடிப்­பு­டன் இயங்கி வரு­கின்­றார். அறி­வுரை கேட்க முன்­வ­ரும் இளைய விமா­னி­க­ளுக்கு, குழு உரை­யா­டல்­கள் மூல­மும், மாதாந்­திர சந்­திப்­பு­கள் மூல­மும், அவர் தொடர்ந்து வழி­காட்டி வரு­கின்­றார். தனது கடந்த கால அனு­ப­வங்­களை வருங்­கால தலை­மு­றை­யி­ன­ரி­டம் பகிர்ந்­து­கொண்டு, சிறந்த விமா­னி­க­ளாய் அவர்­களை வளர்த்­தெ­டுக்­கும் பணி­யில் திரு கணே­ச­னுக்­குப் பங்­குண்டு. தனது நீண்ட பய­ணத்­தில் தான் கண்­ட­வற்­றை­யும் உணர்ந்­த­வற்­றை­யும் பிற­ரோடு பகிர்ந்­து­கொள்­ளா­மல் இருப்­பதை மிகப் பெரிய நட்­ட­மா­கக் கரு­து­கின்­றார் அவர். எனவே, இளைய விமா­னி­க­ளுக்கு இத்­துறை சார்ந்த விழிப்­பு­ணர்­வை­யும் இப்­ப­ணிக்­குத் தேவை­யான பண்­பு­க­ளை­யும் ஊட்­டு­வ­தற்கு அவர் முக்­கி­யத்­து­வம் அளித்து வரு­கின்­றார். ஒரு துறை­யில் சிறந்து விளங்கு­வ­தால் மட்­டுமே ஒரு­வர் நல்ல ஆசி­ரி­ய­ரா­க­வும் வழி­காட்­டி­யா­க­வும் திகழ முடி­யாது என்று நம்­பும் திரு கணே­சன், நல்ல முறை­யில் பயிற்­று­விப்­ப­தற்­கா­ன திறன்­களை மேலும் வளர்த்­துக்­கொள்ள விருப்­பப்­ப­டு­வ­தா­க­வும் சொன்­னார்.

கடந்த ஆண்­டி­லி­ருந்து 'தரவு உள்­ளீடு' பணி­யில் சேர்ந்து, தனது தனிப்­பட்­ட திறன் மேம்­பாட்­டி­லும் கவ­னம் செலுத்தி வரு­கின்­றார் திரு கணே­சன். மேலும், தனது 90 வயது மருத்­துவ நண்­ப­ரின் மருந்த­கத்­துக்குத் தின­மும் சென்று அவ­ருக்கு உத­வி­யாக இருந்து வரு­கின்­றார் அவர். இவ்­வ­கை­யில், அவ­ரது குடும்­பத்­துக்­கும், சமூ­கத்­துக்­கும், தனக்­கும் நேரம் ஒதுக்­கிக்­கொண்டு, தன்­னால் முடிந்த அள­வில் தொடர்ந்து பங்­காற்­று­கி­றார்.

இவ்­வாறு திட்­ட­மிட்­டுக்­கொண்டு, ஆரோக்­கி­ய­மா­ன­தொரு வாழ்க்கை முறையை அமைத்­துக்­கொண்ட திரு கணே­சன், சிறந்த வாழ்­வி­யல் நிர்­வா­கமே நம்மை சமூ­கத்­துக்­குப் பயன்­படும் வகை­யில் பங்­க­ளிக்க உத­வும் என்­றார். சமூ­கத்­துக்­குப் பணி­யாற்­றும் கட­மை­யும் இள­மை­யும் தனக்கு இன்­னும் இருப்­ப­தாக உணர்­கிறார் திரு கணே­சன். மேலும், நாம் சமூ­கத்­தில் நற்­பாங்­காற்­று­கி­றோம் என்ற உணர்­வு­தான் நம்மை மிக இள­மை­யாக வைத்­தி­ருக்­கும் என்று அவர் கூறி­னார். எப்­ப­ணி­யில் சேர்ந்­தா­லும், அதில் நமக்­குக் கிட்­டும் ஊதி­யத்­தை­விட அதில் நாம் ஆற்­றக்­கூ­டிய பங்­கை­யும் அதி­லி­ருந்து கிடைக்­கும் அனு­ப­வத்­தை­யுமே நாம் முதன்­மை­யா­கக் கருதி செயல்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

வெற்றிகரமாக மூப்படைவதற்கான செயல்திட்டம்

உறுதியுடனும் கண்ணியத்துடனும் சிங்கப்பூரர்கள் மூப்படைவதற்கான வழிகளை ஆராயும் நோக்கில் 2015ஆம் ஆண்டில் மூப்படைதல் விவகாரங்களுக்கான அமைச்சர்நிலைக் குழு இச்செயல்திட்டத்தைத் தொடங்கியது.

அக்குழு 2017ஆம் ஆண்டில் "இளமை உணர்வில் நான் எஸ்ஜி" எனும் திட்டத்தைத் தொடங்கி, செயல்திட்டத்தையும் துடிப்பான மூப்படைதலையும் ஊக்குவிக்க முனைந்தது.

மேல் விவரங்களுக்கு http://www.ifeelyoung.sg/ இணையப்பக்கத்தை நாடலாம்.

தற்கால, எதிர்கால மூத்தோருக்கு சேவையாற்ற, மேலும் பலதரப்பட்ட தேவைகளுக்கு உடனடியாக உதவவும் கொவிட்-19 சூழலால் புதிய செயல்பாட்டு சூழலையும் கற்றலையும் கொண்டு புதுப்பிக்கப்பட்டச் செயல் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.புதுப்பிக்கப்பட்ட செயல் திட்டமானது, பராமரிப்பு, பங்களிப்பு, இணைப்பு ஆகிய மூன்று கூறுகளை மையப்படுத்துவதாக அமைகிறது.

பராமரிப்பு எனும் கூறு, நடைப்பிணிகளைத் தவிர்க்கவும், மூத்தோரின் வாழ்வு நலனை மேம்படுத்தவும், பராமரிப்பு சேவைகள் மூலம் தங்களது உடல் மற்றும் மனநலனைப் பேணி வாழவும் ஊக்குவிக்கும்.

பங்களிப்பு எனும் கூறு, மூத்தோருக்கான வேலை வாய்ப்புகளையும், கற்றல் அனுபவங்களையும், தொண்டூழியப் பணி ஈடுபாட்டையும் அதிகரிக்க முற்படும்.

கடைசியாக, இணைப்பு எனும் கூறு, "கம்பத்து உணர்வு" போன்ற மூத்தோருடைய சமூகப் பிணைப்பையும், இளைய தலைமுறையினருடனான உறவுகளையும் மின்னிலக்கத் தளங்களில் வலுப்படுத்துவதோடு அரவணைப்புடன் கட்டப்பட்ட சூழலில் மூப்படைவதற்கு ஆதரவளிக்கும்.