டாவோஸ்: 1765 முதல் 1900 வரை நூற்றாண்டுக்கு மேலான காலனித்துவ ஆட்சியின்போது இந்தியாவிடமிருந்து US$64.82 டிரில்லியனை பிரிட்டன் பறித்தது. அதில் இன்றைய மதிப்பின்படி, US$33.8 டிரில்லியன் மதிப்பிலான செல்வம், பிரிட்டனின் 10 விழுக்காட்டு பெரும் பணக்காரர்களிடம் சென்றது.
இது, 50 பிரிட்டிஷ் பவுண்ட் நோட்டுகளைக் கொண்டு லண்டனின் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கு மடங்கு கம்பளம் விரிப்பதற்குப் போதுமான பணம்.
ஆண்டுதோறும் உலகப் பொருளியல் மன்றத்தின் வருடாந்தர கூட்டத்தின் முதல் நாளில் வெளியிடப்பட்ட உரிமைக் குழுவான ஆக்ஸ்ஃபாம் இன்டர்நேஷனலின் ஆக அண்மைய முதன்மையான உலகளாவிய ஏற்றத்தாழ்வு அறிக்கையின் ஒரு பகுதி இது.
‘எடுப்பவர்கள், தயாரிப்பாளர்கள் அல்ல’ என்ற தலைப்பில், உலகம் முழுவதும் பணக்காரர்களுக்கும் செல்வாக்குமிக்கவர்களுக்குமான வருடாந்தர கூட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு, திங்கட்கிழமை (ஜனவரி 20) வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, நவீன பன்னாட்டு நிறுவனம் காலனித்துவத்தின் உருவாக்கமே என்று பல ஆய்வுக் கட்டுரைகளையும் மேற்கோள் காட்டியது.
பிரிட்டனில் இன்று கணிசமான பணக்காரர்கள் தங்கள் குடும்பச் செல்வத்தை அடிமைத்தனம் மற்றும் காலனித்துவத்துடன் தொடர்புபடுத்த முடியும். குறிப்பாக, அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டபோது பணக்கார அடிமைகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு அது.

