சாலை விபத்துகளில் ஓராண்டில் மட்டும் 1.77 லட்சம் பேர் உயிரிழப்பு

1 mins read
c76ebf13-4985-4867-a49d-d4ca8f601be2
நிதின் கட்காரி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் சாலை விபத்துகளில் சிக்கி ஏறக்குறைய 1.77 லட்சம் பேர் மாண்டுவிட்டதாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாள்தோறும் ஏறக்குறைய 485 பேர் பல்வேறு சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது எழுப்பபட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் கவலை அளிக்கிறது. எனினும், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சாலைப் போக்குவரத்து இழப்புகள், காயமடைவோரின் எண்ணிக்கையை 50 விழுக்காடாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“இந்தியாவில் கடந்த ஆண்டு சாலை விபத்து இழப்புகளின் எண்ணிக்கை 1.77 லட்சம் பேராகப் பதிவாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் (2023), ஏறக்குறைய 4.8 லட்சம் சாலை விபத்துகளில் சிக்கி 1.73 லட்சம் பேர் மாண்டுவிட்டனர்,” என்றார் அமைச்சர் நிதின் கட்காரி.

நாட்டில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
சாலைவிபத்துஉயிரிழப்புநிதின் கட்காரி