பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் ஆம்ஆத்மி முன்னிலை

2 mins read
e683dc0e-afec-4508-a7d1-226f88dbff12
பஞ்சாப் மாநிலத்தில் 347 மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை புதன்கிழமை காலை 8.00 மணிக்குத் தொடங்கியது. - கோப்புப்படம்: ஊடகம்

சண்டிகார்: பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அகாலி தள கட்சிக்கும் இடையே கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிலைகளிலான உள்ளாட்சித் தேர்தல்கள் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்றன.

புதன் காலை 8.00 முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 154 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இரண்டு கட்ட வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அகாலி தளம் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக கட்சி மிக மோசமான படுதோல்வியை சந்தித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 347 மாவட்ட பஞ்சாயத்துகளில் ஆம் ஆத்மி- 47, காங்கிரஸ்: 19, அகாலிதள் 17, இதர கட்சிகள்-3 இடங்களையும் பாஜக ஓர் இடத்தையும் கைப்பற்றி உள்ளன.

பாட்டியாலாவில், பாட்டியாலா-நாபா சாலையில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அகாலி தளத் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

அதேவேளையில், பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங்கின் மகன் ராகுல் சைனி வாக்கு எண்ணும் மையத்திற்குள் இருந்தார் என்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் சிரோமணி அகாலி தளம் தலைவர் ஜஸ்பால் சிங் கூறினார்.

இது தொடர்பாக, தேர்தல் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான வாக்கு எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்