திமுகவை விமர்சித்து அரசுப் பேருந்தில் அவதூறு வாசகங்கள்

திமுகவை விமர்சித்து அரசுப் பேருந்தில் அவதூறு வாசகங்கள்

படம்: தினமலர்

15 Oct 2026 - 2:53 pm

1 mins read

கடலூர்: தமிழக அரசுப் பேருந்தில் திமுக ஒரு தீயசக்தி என்று மின்னிலக்கப் பலகையில் காட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் இருந்து திருச்சி செல்லும் அரசுப் பேருந்தில் அவ்வாறு எழுதப்பட்டிருந்தது. அதனைக் காணொளியாக எடுத்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், பெரம்பலுார் வழியாக திருச்சி செல்லும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து என்பது அந்தக் காணொளியில் தெரிந்தது.

பேருந்தின் பின்பகுதியில் வழித்தடங்களைக் காட்டும் மின்னிலக்கப் பலகையில், ‘ஓம்சக்தி; பாரசக்தி; திமுக ஒரு தீயசக்தி; கொளத்தூர் கொத்து பரோட்டா; ஸ்டாலின் அங்கிள்’ என்ற வார்த்தைகள் வரிசையாக நகர்ந்துகொண்டிருந்தன.

அதுகுறித்து கடலுார் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், “அந்தப் பேருந்தின் மின்னிலக்கப் பெயர்ப் பலகைக்குச் செல்லும் மின்கம்பி துண்டிக்கப்பட்டுள்ளது.

“அதனைப் பயன்படுத்தி சிலர் அவதூறு வாசகங்களை இடம்பெறச் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்