தொடரும் எண்ணெய் விலை ஏற்றத்தால் ரூபாய் மதிப்பு மீட்சிக்குச் சோதனை

தொடரும் எண்ணெய் விலை ஏற்றத்தால் ரூபாய் மதிப்பு மீட்சிக்குச் சோதனை

கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

13 Oct 2026 - 7:50 pm

1 mins read

பெங்களூரு: இந்திய ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்க முடியும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து சென்றதைத் தடுக்க கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சில நடவடிக்கைகளை அறிவித்தது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அமெரிக்க டாலர் கொள்முதலை முறைப்படுத்துவதோடு அந்நியச் செலாவணி வர்த்தக விதிகளைக் கடுமையாக்கக்கூடிய நடவடிக்கைகள் அவை.

இருப்பினும், கச்சா எண்ணெய் விலைகளின் தொடர் உயர்வும் மூலதன வெளியேற்றமும் ரூபாய் மதிப்பின் மீது தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அதனால், ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்கு நிரந்தரப் பலன் கிடைக்குமா என பொருளியல் ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

ரிசர்வ் வங்கி மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் ரூபாயின் மதிப்பில் உடனடி ஏற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் ஒரு நிலைக்கு வரும் என சிட்டி வங்கியின் பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆயினும், ரூபாய் மதிப்பு குறுகிய காலத்தில் உயர்ந்தாலும், வரவுசெலவு சமநிலை மீதான அழுத்தங்களைக் குறைக்க அது பெரிய அளவில் உதவாது என்றும் அவர்கள் கூறினர்.

ரிசர்வ் வங்கி கடந்த வாரம் ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 விழுக்காட்டிலிருந்து 5.50 விழுக்காட்டுக்கு உயர்த்தியது.

அத்துடன், தனது நிதிக் கொள்கையை அந்த வங்கி இறுக்கமாக்கியது.

குறிப்புச் சொற்கள்