புதுச்சேரியில் 75 மின்சாரப் பேருந்துகள் இயக்க முடிவு

1 mins read
bcad36dc-38bd-4e6d-8fc8-cf5892ea300f
மின்சாரப் பேருந்துகள். - படம்: மாலை மலர்

புதுச்சேரி: ‘பிரதமர் இ-பஸ் சேவா’ திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்திற்காக மகாராஷ்டிரா, அரியானா, ஒடிசா, குஜராத், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களும் சண்டிகர், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 2024-25ஆம் ஆண்டிற்கான 4,588 மின்சாரப் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரியில் 75 மின்சாரப் பேருந்துகளை இயக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ரூ.57,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.20,000 கோடி வழங்கப்படும். மீதமுள்ள தொகையை, இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே ஏற்றுக்கொள்ளும்.

இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி, புதுவை முழுவதும் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இது குறித்துக் கூறுகையில், “மொத்தமுள்ள 75 பேருந்துகளில், 12 மீட்டர் நீளம் கொண்ட 50 பேருந்துகள் புறநகர் பகுதிகளிடையேயும், 9 மீட்டர் நீளம் கொண்ட 25 பேருந்துகள் புதுவை நகரப் பகுதிகளுக்குள்ளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்