மின்னிலக்க இந்தியா மாற்றத்தை ஏற்படுத்தும்: அதிபர் முர்மு

1 mins read
be9ab9b0-92f0-41be-b9b3-6389dddddb16
அதிபர் திரௌபதி முர்மு. - படம்: ஊடகம்

புதுடெல்லி: மின்னிலக்கமயமான இந்தியாவில் மாணவர்கள் புதிய திசைகளில் சிந்திக்க வேண்டும் என்று அதிபர் திரௌபதி முர்மு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இதுவரை இல்லாத தொழில்நுட்பங்களை மாணவர்கள் கண்டறிய வேண்டும் என்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் 5வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது அவர் வலியுறுத்தினார்.

வளர்ச்சி பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி, இந்தியா மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் நடைபோட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், உலகளாவிய பருவநிலை நெருக்கடியைச் சமாளிப்பதில் நாடு முக்கியப் பங்களிப்பை ஆற்றி வருவதாகத் தெரிவித்தார்.

“மின்னிலக்க இந்தியா என்பது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி. நவீன தொழில்நுட்பங்கள் குடிமக்களைச் சென்றடைவதை சாத்தியமாக்குவதன் மூலம் எண்ணற்ற வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்க முடியும்.

“தொலைதூரப் பகுதிகளுக்கு வேகமான இணையச் சேவையும் அண்மைய தொழில்நுட்பமும் கொண்டு செல்லப்படுகின்றன.

“இதன் மூலம் இந்தியா இலக்கை நோக்கிச் செல்வது உறுதியாகி உள்ளது,” என்றார் அதிபர் திரௌபதி முர்மு.

குறிப்புச் சொற்கள்