மின்னிலக்கமயமாகப்பட்ட 20.58 கோடி குடும்ப அட்டைகள்

1 mins read
59c0a7ee-b994-429f-b230-70a1212340e0
பிரகலாத் ஜோஷி. - படம்: ஊடகம்

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான குடும்ப அட்டைகள் மின்னிலக்கமயமாக மாற்றப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் மின்னிலக்க அட்டை என்ற இலக்கை ஏறக்குறைய 100 விழுக்காட்டளவு அடைந்துவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார்.

மத்திய உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சரான அவர், நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இத்தகவலைத் தெரிவித்தார்.

“தற்போது நாடு முழுவதும் ஏறக்குறைய 20.58 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளதாகவும் அவை அனைத்துமே கிட்டத்தட்ட மின்னிலக்க மயமாக்கப் பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“பிரதமர் பெயரிலான திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு அரசாங்கம் இலவச குடும்ப அட்டைகளை வழங்கி வருகிறது. இது 2029 வரை தொடரும்.

“இந்தத் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு ஐந்து கிலோ இலவச உணவு தானியங்களைப் பெறுகின்றனர்,” என்றும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்