விழிபிதுங்கும் மும்பை: போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க புதிய சுரங்கப் பாதைகள்

1 mins read
a53fba48-0939-46ee-955c-eefedba1db59
தேவேந்திர பட்னாவிஸ். - படம்: ஊடகம்

மும்பை: போக்குவரத்து நெரிசலால் விழிபிதுங்கிய நிலையில் உள்ள மும்பையில் புதிய சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மும்பையில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்​தடங்​களை அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகச் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

நாட்​டின் வர்த்தக தலைநக​ரான மும்பை மாநகரில் தற்போது போக்​கு​வரத்து சராசரி வேகம் ஒரு மணிநேரத்துக்கு 20 கிலோமீட்டராக உள்ளது. எனினும், காலை, மாலை நேரங்களில் வாகனப் போக்குவரத்து உச்சத்தில் இருக்கும்போது இந்த வேகம் 15 கிலோமீட்டராகக் குறைந்துபோகிறது.

இதையடுத்து, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அடியில் புதிய சுரங்கப் பாதைகள் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பட்னாவிஸ் கூறினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மும்பையில் பல்வேறு பகுதிகளில் இச்சுரங்கப் பாதைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றார் அவர்.

மும்பை புறநகர் ரயில்​களில் நாள்தோறும் 90 லட்​சம் பேர் பயணம் மேற்​கொள்​வதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்த ரயில் சேவையை மேம்​படுத்த பல்​வேறு நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​வதாகக் குறிப்பிட்டார்.

மேலும், மும்பை மெட்ரோ ரயில்​களைப் போன்று அனைத்து புறநகர் மின்​சார ரயில்​களி​லும் குளிரூட்டி (ஏசி) வசதி செய்​யப்​படும் என்றும் இதற்​காகப் பயணிகளிடம் இருந்து கூடுதலாக எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் முதல்வர் பட்னாவிஸ்​ தெரி​வித்​தார்​.

குறிப்புச் சொற்கள்