ஜெய்ப்பூரில் ஆப்பிள் நிறுவனத்தின் பெயரில் மோசடி; 14 பேர் கைது

ஜெய்ப்பூரில் ஆப்பிள் நிறுவனத்தின் பெயரில் மோசடி; 14 பேர் கைது

படம்: மின்னம்பலம்

03 Oct 2026 - 12:25 pm

1 mins read

ஜெய்ப்பூர்: ஆப்பிள் நிறுவனத்தின் பெயரில் அமெரிக்கர்களிடம் மோசடி செய்துவந்த போலி சேவை நிலையத்தில் ஜெய்ப்பூர் காவல்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 மடிக்கணினிகள், 24 கைப்பேசிகள், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு மின்னணுச் சாதனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், சிர்சி சாலையிலுள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் போலிச் சேவை நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. அதிலிருந்து அமெரிக்கர்களின் கைப்பேசி எண்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் பெயரில் போலியான குறுஞ்செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதில், ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்கள் வாங்குவதற்காக உங்கள் கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது போன்ற தகவல்களை அனுப்பியுள்ளனர். அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை தொடர்புகொண்டவர்களைக் கட்டணத்தை ரத்துச் செய்ய அல்லது தொழில்நுட்ப உதவி எனக் கூறிப் பணம் செலுத்த வைத்துள்ளனர்.

இந்தச் சேவை நிலையம் குறித்து ஜெய்ப்பூர் காவல்துறை ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து ஜெய்ப்பூர் மேற்கு மாவட்டச் சிறப்புப் படையினரும் ராஜஸ்தான் இணையக் குற்றத் தடுப்பு நிலைய அதிகாரிகளும் இணைந்து அதிரடிச் சோதனை நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்