சென்னையில் ஆபரணத் தங்க விலை அதிகரிப்பு

1 mins read
1b05450d-21f6-4e4f-a763-db7d96b765e9
இந்தியாவில் தங்க விலை மீண்டும் அதிகரித்துள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: சென்னையில் புதன்கிழமை அன்று (டிசம்பர் 10) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு 240 ரூபாய் (S$3.46) அதிகரித்தது. அதாவது, ஒரு பவுன் 96,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அனைத்துலக சூழ்நிலையால் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாரத்தின் தொடக்க நாளான டிசம்பர் 8ஆம் தேதி தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. கிராம் 12,040 ரூபாய்க்கும், பவுனுக்கு 96,320 ரூபாய்க்கும் விற்பனையாகி வந்தது.

முந்தைய நாளான செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 9) தங்கம் விலை பவுனுக்கு 320 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் 96,000 ரூபாய்க்கு விற்பனையானது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 12,000 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 199 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் புதன்கிழமை தங்கம் விலை பவுனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஒரு பவுன் 96,240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் அதிகரித்து 12,030 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கிலோவுக்கு 8,000 ரூபாய் அதிகரித்து 2,07,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 207க்கு விற்பனையாகிறது.

குறிப்புச் சொற்கள்