குஜராத்: சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் கைது

1 mins read
8f15b458-1c2c-4a84-9c5a-ccd8b2c2eecc
கைதானவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சுஜாவால் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு அலி என அடையாளம் காணப்பட்டது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

குஜராத்: குஜராத்தின் கட்சு மாவட்டத்தில் இருநாட்டு எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவர் கைது செய்யப்பட்டார்.

அம்மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள கட்சு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) பாதுகாப்புப் படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்குள்ள ஹராமி நாலா எனும் நீர்நிலையின் வடக்குப் பகுதி வழியாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆடவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் சுஜாவால் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு அலி என்றும் அவர் காரூ கூன்குரோ எனும் கிராமத்தில் வசித்து வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

அவர் கடந்து வந்த ஹராமி நாலா என்பது இருநாட்டு எல்லைக்கு மத்தியில் ஓடும் இயற்கையான நீர்நிலை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்