பெங்களூரு: பெங்களூருவில் படுக்கைறையில் தமது கணவர் கேமரா ஒன்றை மறைத்துவைத்ததாக பெண் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
தமது கணவருடன் நெருக்கமாக இருந்த, அந்தரங்கக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டதாக பெங்களூருவைச் சேர்ந்த அந்த 27 வயது பெண் தெரிவித்தார்.
35 வயது சையத் இனாமுல் என்பவரைத் தாம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரம்பிடித்ததாக அப்பெண் தமது புகார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். வரதட்சணையாக 340 கிராம் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவை தமது கணவருக்குக் கொடுக்கப்பட்டதாக அப்பெண் கூறினார்
இதையடுத்து, தமது கணவர் ஏற்கெனவே திருமணமானவர் என்று தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, அவர் தம்மைத் தாக்கியதாக அப்பெண் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, அவருக்கு 19 பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.
தம்முடன் நெருக்கமாக இருக்கும் காணொளிகளை வெளிநாடுகளில் உள்ள நண்பர்களுடன் தமது கணவர் பகிர்ந்துகொண்டதாகவும் வெளிநாடுகளில் இருந்து அவர்கள் பெங்களூரு வரும்போது தம்மை அவர்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியதாகவும் அப்பெண் புகார் செய்தார்.
கணவர் கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது பெற்றோரும் தம்மைக் கடுமையாகத் தாக்கி துன்புறுத்தியதாக அப்பெண் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து சையத் இனாமுல், அவரது பெற்றோர் உட்பட நால்வர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சையத்தைத் தேடி வருகின்றனர்.