எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிய மாட்டேன்: சூர்யகாந்த்

1 mins read
adbcc6d0-7a8e-41ff-89c1-267aa542252a
நீதிபதி சூர்யகாந்த். - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணிய மாட்டேன் என இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார். தம்மிடம் யாருடைய மிரட்டலும் எடுபடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கள்ளக்குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதையடுத்து அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு சில கருத்துகளைத் தெரிவித்தது.

இந்தியாவில் ரோஹிங்யா அகதிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு, ஆதரவு என இரண்டும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது. ‘நீதிமன்றத்தில் சில நேரங்களில் எதிர்பாராத சூழல்கள் உருவாகும்’ என்றார் தலைமை நீதிபதி.

“அத்தகைய சமயங்களில் நீதிபதிகளாகிய நாங்கள் சில கருத்துகளைத் தெரிவிக்கிறோம். ஆனால் அவ்வாறு ஒரு நீதிபதி கருத்து கூறிய உடனேயே, அவர் பலவகையிலும் குற்றஞ்சாட்டப்படுகிறார். ஆனால், தாம் எந்தவித அச்சுறுத்தலுக்கும் அடிபணிய வாய்ப்பில்லை,” என்றார் தலைமை நீதிபதி சூர்யகாந்த். 

குறிப்புச் சொற்கள்