மெல்பெர்ன்: மறைந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் புகழ் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் அந்நாட்டு அணிக்கு எதிராக நான்காவது கிரிக்கெட் போட்டி கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலமான தகவல் இந்திய வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய வீரர்கள் அனைவரும் அவரது மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், தங்கள் கையில் கறுப்பு பட்டையை அணிந்து கொண்டு விளையாடினர்.
மன்மோகன் சிங் மறைவுக்கு அரசியல் கடந்து, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.
முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

