புதுடெல்லி: இந்தியப் பெருங்கடல் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பாரம்பரியம் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை அதனையொட்டியுள்ள நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தவும், அதனையொட்டியுள்ள நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் கொழும்பு பாதுகாப்பு மாநாடு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் மாநாடு புதுடெல்லியில் நடைபெற்றது.
இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் இலங்கை, பங்ளாதேஷ், மாலத்தீவு, மொரிசியஸ் ஆகிய உறுப்பு நாடுகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அஜித் தோவல், இந்தியப் பெருங்கடலைப் பாதுகாப்பது என்பது அனைவரது கடமை என்றார். இந்தியப் பெருங்கடலின் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை, எந்தவித சமசரமும் இன்றி, அக்கடலை ஒட்டியுள்ள நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

