லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு என்று கூறிய கர்நாடக எம்.எல்.ஏ

1 mins read
1ce8ce03-7481-448a-9ea4-cd0ab8a32fc9
லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

பெங்களூர்: கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.

கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று துறை பிரதிநிதிகளின் பரிந்துரைகளுக்கு வழங்காமல், லஞ்சம் அளிப்பவர்களுக்காக 950 வீடுகளை வழங்கியதாக அம்மாநில கொள்கை மற்றும் திட்டக்குழுவின் துணைத் தலைவரும் எம்எல்ஏவுமான பாட்டீல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக எம்எல்ஏ பாட்டீல் பேசிய தொலைபேசி உரையாடல் கசிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, வீட்டுவசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் உதவியாளர் சர்பராஸ் கானுடன் பாட்டீல் தொலைபேசியில் பேசுகையில், “யார் பணம் கொடுத்தாலும், வீடுகளைக் கொடுப்பதற்கு இது என்ன வணிகமா?

“பிரதிநிதிகளின் பரிந்துரைகளைவிட பணம் அளிப்பவர்களின் பரிந்துரைகளுக்கு வீட்டுவசதிக் கழகம் முன்னுரிமை அளிப்பது ஏன்? இவ்வாறு செய்தால் எனக்கு என்ன மரியாதை?,” என்று கேட்டுள்ளார்.

ஆனால், பாட்டீலின் குற்றச்சாட்டை மறுத்த சர்ஃபராஸ், லஞ்சம் கொடுத்து வீடுகள் பெற்ற பயனாளிகளின் பட்டியலைக் கொடுத்தால், லஞ்சம் பெற்ற அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கூறினார்.

இருப்பினும், அவர்களின் பட்டியலை வெளியிட்டால், கர்நாடக அரசு கதிகலங்கி விடும் என்று பாட்டீல் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்